Song 506
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
- Sthalam
- சிதம்பரம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தனதானதன தத்த தந்தனதந்ததான
Lyrics
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியைநாடியின டத்தி மந்திரபந்தியாலே
நாரண புரத்தி லிந்துவி னுடுற இணக்கி நன்சுடர்நாறிசை நடத்தி மண்டலசந்தியாறிற்
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறுகோவென முழக்கு சங்கொலிவிந்துநாதங்
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொருகோடிநட னப்ப தஞ்சபையென்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலிஆரணர் தலைக்க லங்கொளிசெம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனைஆளுமை பரத்தி சுந்தரிதந்தசேயே
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்வீடெரி கொளுத்தி யெண்கடலுண்டவேலா
வேசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்வீறுநட னர்க்கி சைந்தருள்தம்பிரானே.
