Song 505
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
- Sthalam
- சிதம்பரம்
- Raagam
- ஷண்முகப்ரியா
- Thalam
- ஸங்கீர்ண சாபு (4 1/2)
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1தானா தனத்ததன தானா தனத்ததனதானா தனத்ததனதனதான
Lyrics
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதிநாயே னரற்றுமொழிவினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமெனநாலா வகைக்குமுனதருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறிவாய்பாறி நிற்குமெனைஅருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுதுவாரே னெனக்கெதிர் முன்வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரிதோலா சனத்தியுமையருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்ததோழா கடப்பமலரணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகுமேராள் குறத்திதிருமணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளைஈடேற வைத்தபுகழ்பெருமாளே.
