Song 507
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
- Sthalam
- சிதம்பரம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானத்தன தானத்தன தானத்தன தானத்தனதானத்தன தானத்தனதனதான
Lyrics
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறைநீளச்சசி யார்பொட்டணிநுதல்மாதர்
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணிநேமித்தெழு தாசித்திரவடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளையாகத்தமி யேனித்தமுமுழல்வேனோ
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திரமாகக்கொள வேமுத்தியையருள்வாயே
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினிமார்பிற்பிர காசக்கிரிதனபார
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினிமாணிக்கமி னாள்நிஷ்களஉமைபாகர்
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொருசோதிப்பொருள் கேள்விக்கிடுமுருகோனே
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்சோதிப்புலி யூர்நத்தியபெருமாளே.
