Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 954

இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத்தனதான

Lyrics

இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்கிதத்தபுட் குரற்கள்விட்டநுராகம்

எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்தெடுத்திதழ்க் கடித்துரத்திடைதாவி

அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்தலக்கணுற் றுயிர்க்களைத்திடவேதான்

அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்டயர்க்குமிப் பிறப்பினித்தவிராதோ

கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்கொடித்திருக் கரத்தபொற்பதிபாடுங்

குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்குருத்துவத் தெனைப்பணித்தருள்வோனே

தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்தமிழ்த்ரயத் தகத்தியற்கறிவோதுஞ்

சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்தனிச்சயத் தினிற்பிளைப்பெருமாளே.

All songs →