Song 953
தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
- Sthalam
- குளந்தைநகர்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனந்த தானனத் தனதனதனதான
Lyrics
தரங்க வார்குழற் றநுநுதல்விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடைமடமாதர்
பரந்த மாலிருட் படுகுழிவசமாகிப்
பயந்து காலனுக் குயிர்கொடுதவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர்தருவாரே
மகிழ்ந்து தோகையிற் புவிவலம்வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகண்மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறைபெருமாளே.
