Song 380
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
- Sthalam
- திருவருணை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தான தத்த தனதனன தான தத்ததனதனன தான தத்ததனதான
Lyrics
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்குமுழுமதிநி லாவி னுக்கும்வசையாலும்
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்குமுதியமத ராஜ னுக்குமழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்தபுதுமையினி லாறி ரட்டிபுயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ரபொருமயிலி லேறி நித்தம்வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்குளெழுதரிய கோபு ரத்திலுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்தஇளமுலைவி டாத சித்ரமணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்தசிவனைமுத லோது வித்தகுருநாதா
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்றசிறையடைய மீள விட்டபெருமாளே.
