Song 379
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
- Sthalam
- திருவருணை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தான தத்த தனதனன தான தத்ததனதனன தான தத்ததனதான
Lyrics
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்டதழலமளி மீதெ றிக்குநிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்ததறுகண்மத வேள்தொ டுத்தகணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்றுமருவுமென தாவி சற்றுமழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ரமயிலின்மிசை யேறி நித்தம்வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சிகலவிதொலை யாம றத்திமணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்தகடியமல ராத ரித்தகழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றிஅருணைநகர் கோபு ரத்திலுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பிஅமரர்சிறை மீள விட்டபெருமாளே.
