Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 251

ஏது புத்திஐ யாஎ னக்கினி

Thalam
மிஸ்ரசாபு (3 1/2)

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தகிட-1 1/2, தகதிமி-2தான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தனதான தத்தன தான தத்தனதந்ததான

Lyrics

ஏது புத்திஐ யாஎ னக்கினியாரை நத்திடு வேன வத்தினிலேயி றத்தல்கொ லோஎ னக்குனிதந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படியேத வித்திட வோச கத்தவரேச லிற்பட வோந கைத்தவர்கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனைதாளில் வைக்கநி யேம றுத்திடில்பார்ந கைக்குமை யாத கப்பன்முன்மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்யாரெ டுப்பதெ னாவெ றுத்தழபார்வி டுப்பர்க ளோஎ னக்கிதுசிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்ததுபோல எட்டிகை நீசமுட்டரையோட வெட்டிய பாநு சத்திகையெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்மான்ம ழுக்கர மாட பொற்கழலோசை பெற்றிட வேந டித்தவர்தந்தவாழ்வே

மாதி னைப்புண மீதி ருக்குமைவாள்வி ழிக்குற மாதி னைத்தருமார்ப ணைத்தம யூர அற்புதகந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழலார்வி யப்புற நீடு மெய்த்தவர்வாழ்தி ருத்தணி மாம லைப்பதிதம்பிரானே.

All songs →