Song 250
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
- Sthalam
- திருத்தணிகை
- Raagam
- ஆனந்த பைரவி
- Thalam
- திஸ்ரத்ருவம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
(திஸ்ர நடை) (16 1/2), (எடுப்பு - /3/3/3 0)தனன தந்த தத்த தனன தந்த தத்ததனன தந்த தத்ததனதான
Lyrics
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்தமெரிவ ழங்கு வெப்புவலிபோசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொடிரும லென்று ரைக்குமிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்தமதிம யங்கி விட்டுமடியாதே
மருவி யின்றே னக்கு மரக தஞ்சி றக்குமயிலில் வந்து முத்திதரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்கநெறியில் நின்ற வெற்றிமுனைவேலா
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ரநெடிய குன்றில் நிற்குமுருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்திசெயல றிந்த ணைக்குமணிமார்பா
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்தசிறைதி றந்து விட்டபெருமாளே.
