Song 1266
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்ததத்தத் தனத்தத்ததனதான
Lyrics
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்றமட்டுற்ற சுற்றத்தர்மனையாளும்
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டுவைத்துப் பொருட்பற்றுமிகநாட
நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்றநெட்டைக் கயிற்றிட்டுவளையாமுன்
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்பநிற்றத் துவச்சொற்களருள்வாயே
திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்தசித்ரத் தமிழ்க்கொற்றமுடையோனே
சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்தித்திப்பை யிச்சிக்குமணவாளா
முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்குமுத்தித் துவக்குற்றுமொழிவோனே
முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கைமுட்டித் தொளைத்திட்டபெருமாளே.
