Song 1265
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- கரஹரப்ரியா
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - கண்டநடை (20)(எடுப்பு - அதீதம்)தனந்தா தனந்தா தனந்தா தனந்தாதனந்தா தனந்ததனதான
Lyrics
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்ப்ரியங்கூர வந்துகருவூறிப்
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்நடந்தார் தளர்ந்துபிணமானார்
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்அலங்கார நன்றிதேன்முழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்அலந்தேனை யஞ்சலெனவேணும்
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போகவெங்கே மடந்தையெனவேகி
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீயிடுங்கா வலன்றன்மருகோனே
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்புறஞ்சாய அம்புதொடும்வேடர்
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்காபுகழ்ந்தோது மண்டர்பெருமாளே.
