Song 1262
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனந்தன தான தனந்தனதான தனந்தனதனதான
Lyrics
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துபடீர தனம்புளகிதமாகப்
பாவைய ருந்தியல் மூழ்கி நெடும்பரிதாப முடன்பரிமளவாயின்
ஆரமு துண்டணை மீதி லிருந்தநுராகம் விளைந்திடவிளையாடி
ஆக நகம்பட ஆர முயங்கியஆசை மறந்துனையுணர்வேனோ
நாரத னன்றுச காய மொழிந்திடநாயகி பைம்புனமதுதேடி
நாண மழிந்துரு மாறிய வஞ்சகநாடியெ பங்கயபதநோவ
மார சரம்பட மோக முடன்குறவாணர் குறிஞ்சியின்மிசையேபோய்
மாமுநி வன்புணர் மானுத வுந்தனிமானை மணஞ்செய்தபெருமாளே.
