Song 1230
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதாத்த தய்ய தனதாத்த தய்யதனதாத்த தய்யதனதான
Lyrics
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்லரிவைமார்க்கு மெய்யிலவநூலின்
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்லகடுகாட்டி வெய்யஅதிபாரக்
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ளமுகையாக்கை நையுமுயிர்வாழக்
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லைமறைவாழ்த்து செய்யகழல்தாராய்
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளைமுலைவேட்ட பிள்ளைமுருகோனே
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ளசிறைமீட்ட தில்லமயில்வீரா
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ளமலைவீழ்த்த வல்லஅயில்மோகா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்லஅடியார்க்கு நல்லபெருமாளே.
