Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1190

மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்ததன்னதன தத்த தத்ததனதான

Lyrics

மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்தவெண்ணகையில் வட்ட மொத்துஅழகார

விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்தவின்னுதலி லிட்ட பொட்டில்விலைமாதர்

கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்தகண்ணினிணை யிற்சி வத்தகனிவாயிற்

கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்தகன்மவச மெப்ப டிக்குமறவேனே

அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தியம்மையட விப்பு னத்தில்விளையாடும்

அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில்அன்னியஅ ரக்க ரத்தனையுமாளப்

பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்டபுன்மையர்பு ரத்ர யத்தர்பொடியாகப்

பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்றபுண்ணியவொ ருத்தி பெற்றபெருமாளே.

All songs →