Song 1189
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தான தத்த தானதன தான தத்ததானதன தான தத்ததனதான
Lyrics
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்வாரிதுயி லாவ தற்கும்வசையேசொல்
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லுதி சைக்கும்வாயுமிள வாடை யிற்குமதனாலே
வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்துவேறுபடு மேனி சற்றுமழியாதே
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்துமேவுமிரு பாத முற்றுவரவேணும்
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்தஆறுமுக னேகு றத்திமணவாளா
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கிஆலுமயி லேறி நிற்குமிளையோனே
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்தசேவலவ நீப மொய்த்ததிரள்தோளா
சேருமட லால்மி குத்த சூரர்அகாடு போய டைத்ததேவர்சிறை மீள விட்டபெருமாளே.
