Song 1176
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்ததானன தனத்தத் தாத்ததனதான
Lyrics
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டிபாயலி லிருத்திக் காட்டியநுராகம்
பாகிதழ் கொடுத்துக்காட்டி நூல்களை விரித்துக்காட்டிபார்வைகள் புரட்டிக் காட்டியுறவாகி
மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டிமேல்விழு நலத்தைக் காட்டுமடவார்பால்
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டுமேன்மையை யெனக்குக் காட்டியருள்வாயே
காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டிகாரணம் விளைத்துக்காட்டியொருங்காலங்
கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டிகாமனை யெரித்துக் காட்டிதருபாலா
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்வாலிப மிளைத்துக்காட்டிஅயர்வாகி
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டுவாழ்வுறு சமத்தைக்காட்டுபெருமாளே.
