Song 1175
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஹரிகாம்போதி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானனதானத்தத் தனான தானனதந்ததான
Lyrics
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்பாஷிக்கத் தகாது பாதகபஞ்சபூத
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனைபாவிக்கப் பெறாது வாதனைநெஞ்சமான
ஏணிக்கெட் லொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழியேறிபபற் றொணாது நாடினர்தங்களாலும்
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததியேறச்செச் சைநாறு தாளைவணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்ஆபத்தைக் கெடாநி சாசரர்தம்ப்ரகாசம்
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தரஆழிச்சக் ரவாள மாள்தரும்எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுரவாசப்பத் மபாத சேகரசம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்வாசிப்பித் ததேசி காசுரர்தம்பிரானே.
