Song 1118
செட்டா கத்தே னைப்போ லச்சீ
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான
Lyrics
செட்டா கத்தே னைப்போ லச்சீரைத்தே டித்திட்பமதாகத்
திக்கா மற்பா டுற்றா ரிற்சீருற்றா ருக்குச்சிலபாடல்
பெட்டா கக்கூ றிப்போ தத்தாரைப்போல் வப்புற்றுழலாதே
பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்சற்றோ தப்பெற்றிடுவேனோ
எட்டா நெட்டா கத்தோ கைக்கேபுக்கோ லத்திட்டிமையொர்வா
னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தானெட்டா வெட்டிப்பொரும்வேலா
முட்டா மற்றா ளைச்சே விப்பார்முற்பா வத்தைக்களைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
