Song 1106
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானனா தத்தனத் தானனா தத்தனத்தானனா தத்தனத்தனதான
Lyrics
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்தீதெனா நற்றவத்தணைவோர்தம்
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்டோ யுநா யொப்பவர்க்கிளையாதே
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்டூரசூர் கெட்டுகப்பொரும்வேலா
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்றோதநீ திப்பொருட்டரவேணும்
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்தானும்வே தக்குலத்தயனாருங்
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்போதுறா நிற்பஅக்கொடிதான
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்கோதைகா மக்கடற்கிடைமுழ்கக்
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்காமவேள் மைத்துனப்பெருமாளே.
