Song 1105
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானனா தத்தனத் தானனா தத்தனத்தானனா தத்தனத்தனதான
Lyrics
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்கோவைபா டக்கொடிக்கொடிவாதிற்
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்கூறுகா ளக்கவிப்புலவோன்யான்
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்த்யாகமே ருப்பொருப்பெனவோதுஞ்
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்கேளெனா நிற்பதைத்தவிர்வேனோ
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்தாரவா ரக்கடற்கிடைசாயும்
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்டாத்ரு பத்தினிற்சுடராய
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்காகவே ளைப்புகக்கழுநீராற்
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்காமவேள் மைத்துனப்பெருமாளே.
