Song 1078
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தத்தத் தத்தத்தாந்தாந்தனதான
Lyrics
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்கூன்போந்தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்கோண்பூண்டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்போந்தேன்தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்பூண்டாண்டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்சூழ்ந்தாங்குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்தோந்தாந்தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்பாழ்ங்கான்தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்பாங்காம்பெருமாளே.
