Song 1077
முழுமதி யனைய முகமிரு குழையில்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனன தனதன தனனதனதன தனனதந்ததான
Lyrics
முழுமதி யனைய முகமிரு குழையில்முனிவழி முனைகள்கொண்முவா
முதலறி வதனை வளைபவர் கலவிமுழுகிய வினையைமொண்டுநாயேன்
வழிவழி யடிமை யெனுமறி வகலமனமுறு துயர்கள்வெந்துவாட
மதிதரு மதிக கதிபெறு மடிகள்மகிழ்வொடு புகழுமன்புதாராய்
எழுதிட அரிய எழில்மற மகளின்இருதன கிரிகள்தங்குமார்பா
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகிஇமையவர் சிறையையன்றுமீள்வாய்
அழகிய குமர எழுதல மகிழஅறுவர்கள் முலையையுண்டவாழ்வே
அமருல கிறைவ உ மைதரு புதல்வஅரியர பிரமர்தம்பிரானே.
