Song 1050
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
தொடஅ டாது நேராக வடிவு காண வாராதுசுருதி கூறு வாராலுமெதிர்கூறத்**
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேகதுரிய மாகி வேறாகியறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானுமெனவு நேர்மை நூல்கூறிநிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரியான தூதாளிநினைவொ டேகு மோர்நீதிமொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவியமர்செய் வீர ஈராறுபுயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்அரியும் வாழ வானாளுமதிரேகா
கடுவி டாக ளர்ருப நடவி நோத தாடாளர்கருதி டார்கள் தநமுளமுதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேதகருணை மேரு வேதேவர்பெருமாளே.
