Song 1033
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானத்த தானத்த தானத்த தானத்ததானத்த தானத்ததனதான
Lyrics
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்றதோய்மைக்க ணால்மிக்கநுதலாலே
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்சோர்கைக்கு மால்விற்குமடவார்தம்
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்கஓசைக்கு நேசித்துஉ ழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றியோதற்கு நீசற்றுமுணர்வாயே
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்மீதுற்ற பேதைக்கொர்மணவாளா
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்கவேதத்தி லேநிற்குமயனாருந்
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்தசேமத்தி னாமத்தைமொழிவோனே
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்சேவிக்க வாழ்வித்தபெருமாளே.
