Song 1031
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தான தனத்தம் தான தான தனத்தம்தான தான தனத்தம்தனதான
Lyrics
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்கான யாழின் மொழிக்கும்பொதுமாதர்
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்காதில் நீடு குழைக்கும்புதிதாய
கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்கோவை வாயமு துக்குந்தணியாமல்
கூருவே னொரு வர்க்குந் தேடொ ணாததொ ரர்த்தங்கூடு மாறொரு சற்றுங்கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும்போத தேசிக சக்ரந்தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்போத ஆதர வைக்கும்புயவீரா
சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ்சூத தாருவும் வெற்பும்பொருகோவே
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்தோகை வாசி நடத்தும்பெருமாளே.
