Song 1030
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஹிந்தோளம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (10 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3தான தான தானான தானத்தனதான
Lyrics
பேர வாவ றாவாய்மை பேசற்கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப்பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற்றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக்கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப்பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப்பெருமாளே.
