Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 977

முத்தோலை தனைக்கி ழித்தயி

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தத்தான தனத்த தத்தனதத்தான தனத்த தத்தனதத்தான தனத்த தத்தனதனதான

Lyrics

முத்தோலை தனைக்கி ழித்தயிலைப்போரிக லிச்சி வத்துமுகத்தாமரை யிற்செ ருக்கிடும்விழிமானார்

முற்றாதிள கிப்ப ணைத்தணிகச்சார மறுத்த நித்திலமுத்தார மழுத்து கிர்க்குறியதனாலே

வித்தார கவித்தி றத்தினர்பட்டோலை நிகர்த்தி ணைத்தெழுவெற்பான தனத்தில் நித்தலுமுழல்வேனோ

மெய்த்தேவர் துதித்தி டத்தருபொற்பர்கம லப்ப தத்தினைமெய்ப்பாக வழுத்தி டக்ருபைபுரிவாயே

பத்தான முடித்த லைக்குவடிற்றாட வரக்க ருக்கிறைபட்டாவி விடச்செ யித்தவன்மருகோனே

பற்பாசன்மி கைச்சி ரத்தையறுத்தாதவ னைச்சி னத்துறுபற்போகவு டைத்த தற்பரன்மகிழ்வோனே

கொத்தார்கத லிப்ப ழக்குலைவித்தாரவ ருக்கை யிற்சுளைகொத்தோடுதி ரக்கு தித்தெழுகயலாரங்

கொட்டாசுழி யிற்கொ ழித்தெறிசிற்றாறுத னிற்க ளித்திடுகுற்றாலரி டத்தி லுற்றருள்பெருமாளே.

All songs →