Song 974
மாலையில் வந்து மாலை வழங்கு
- Sthalam
- இலஞ்சி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தனந்த தான தனந்ததனா தனந்ததனதான
Lyrics
மாலையில் வந்து மாலை வழங்குமாலை யநங்கன்மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்துவாடை யெறிந்தஅனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்துகோமள வஞ்சிதளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவு மின்றுவரவேணும்
கால னடுங்க வேலது கொண்டுகானில் நடந்தமுருகோனே
கான மடந்தை நாண மொழிந்துகாத லிரங்குகுமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்துசூழ மிலஞ்சிமகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்தசூரனை வென்றபெருமாளே.
