Song 969
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து
- Sthalam
- ஸ்ரீ புருஷமங்கை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தந்த தந்த தானதன தந்த தந்ததானதன தந்த தந்ததனதானா
Lyrics
கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்துகாதலுறு சிந்தை யுந்துமடமானார்
காமுகர கங்க லங்க போர்மருவ முந்தி வந்தகாழ்கடிய கும்ப தம்பஇருகோடார்
பேர்மருவு மந்தி தந்தி வாரணஅ னங்க னங்கபேதையர்கள் தங்கள் கண்கள்வலையாலே
பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தைபீடையற வந்து நின்றனருள்தாராய்
ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்தஏகமயி லங்க துங்கவடிவேலா
ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்ஈடேறஇ ருந்த செந்தில்நகர்வாழ்வே
தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்தசீரலர்கு ளுந்து யர்ந்தபொழிலோடே
சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்தஸ்ரீ புருட மங்கை தங்குபெருமாளே.
