Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 956

அலகில வுணரைக் கொன்ற தோளென

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனனத் தந்த தானனதனதன தனனத் தந்த தானனதனதன தனனத் தந்த தானனதந்ததான

Lyrics

அலகில வுணரைக் கொன்ற தோளெனமலைதொளை யுருவச் சென்ற வேலெனஅழகிய கனகத் தண்டை சூழ்வனபுண்டா£க

அடியென முடியிற் கொண்ட கூதளமெனவன சரியைக் கொண்ட மார்பெனஅறுமுக மெனநெக் கென்பெ லாமுருகன்புறாதோ

கலகல கலெனக் கண்ட பேரொடுசிலுகிடு சமயப் பங்க வாதிகள்கதறிய வெகுசொற் பங்க மாகியபொங்களாவுங்

கலைகளு மொழியப் பஞ்ச பூதமுமொழியுற மொழியிற் றுஞ்சு றாதனகரணமு மொழியத் தந்த ஞானமிருந்தவாறென்

இலகுக டலைகற் கண்டு தேனொடுமிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்இனிமையி னுகருற் றெம்பி ரானொருகொம்பினாலே

எழுதென மொழியப் பண்டு பாரதம்வடகன சிகரச் செம்பொன் மேருவில்எழுதிய பவளக் குன்று தாதையையன்றுசூழ்

வலம்வரு மளவிற் சண்ட மாருதவிசையினும் விசையுற் றெண்டி சாமுகமகிதல மடையக் கண்டு மாசுணமுண்டுலாவு

மரகத கலபச் செம்புள் வாகனமிசைவரு முருகச் சிம்பு ளேயெனமதுரையில் வழிபட் டும்ப ரார்தொழுதம்பிரானே.

All songs →