Song 935
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
- Sthalam
- ராஜபுரம்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தானன தத்தன, தந்த தானன தத்தனதந்த தானன தத்தனதனதான
Lyrics
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகைதண்டு மாகரி பெற்றவன்வெகுகோடிச்
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவிசண்ட மாருத மற்றுளகவிராஜப்
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ரபந்த போதமு ரைத்திடுபுலவோன்யான்
பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சிலபஞ்ச பாதக ரைப்புகழ்செயலாமோ
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெருண்டு மூலமெ னக்கருடனிலேறி
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவிதம்ப ராவஅ டுப்பவன்மருகோனே
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடுகொங்கின் வீரக ணப்ரியகுமராபொற்
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறிகொங்கு ராஜபு ரத்துறைபெருமாளே.
