Song 921
வாசனை மங்கையர் போற்று சிற்றடி
- Sthalam
- திருப்பராய்த்துறை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தந்தன தாத்த தத்தனதானன தந்தன தாத்த தத்தனதானன தந்தன தாத்த தத்தனதனதான
Lyrics
வாசனை மங்கையர் போற்று சிற்றடிபூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திடமாமலை ரண்டென நாட்டு மத்தகமுலையானை
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழைநூலிடை நன்கலை தேக்க இக்குவில்மாரன்வி டுங்கணை போற்சி வத்திடுவிழியார்கள்
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெநீசனெ னும்படி யாக்கி விட்டொருபிணியான
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிடயோகமி குந்திட நீக்கி யிப்படிநீயக லந்தனில் வீற்றி ருப்பதுமொருநாளே
தேசம டங்கலு மேத்து மைப்புயலாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிரதேகமி லங்கிய தீர்க்க புத்திரமுதல்வோனே
தீரனெ னும்படி சாற்று விக்ரமசூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடுகதிர்வேலா
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கமலாசனன் வந்துல காக்கி வைத்திடுவேதன கந்தையை மாற்றி முக்கண¡றிவாக
மூதறி வுந்திய தீ¨க்ஷ செப்பியஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புதமூவரி லங்குப ராய்த்து றைப்பதிபெருமாளே.
