Song 918
காரணி யுங்குழ லைக்கு வித்திடு
- Sthalam
- திருத்தவத்துறை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானன தந்தன தத்த தத்தனதானன தந்தன தத்த தத்தனதானன தந்தன தத்த தத்தனதனதான
Lyrics
காரணி யுங்குழ லைக்கு வித்திடுகோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்காணவ ருந்திமு டித்தி டக்கடுவிரகாலே
காதள வுங்கய லைப்பு ரட்டிமனாதிகள் வஞ்சமி குத்தி டப்படிகாமுக ரன்புகு வித்த கைப்பொருளுறவாகிப்
பூரண கும்பமெ னப்பு டைத்தெழுசீதள குங்கும மொத்த சித்திரபூஷித கொங்கையி லுற்று முத்தணிபிறையான
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடுபூவையர் தங்கள்ம யக்கை விட்டிடஅருள்வாயே
வீரபு யங்கிரி யுக்ர விக்ரமபூதக ணம்பல நிர்த்த மிட்டிடவேகமு டன்பறை கொட்டி டக்கழுகினமாட
வீசிய பம்பர மொப்பெ னக்களிவீசந டஞ்செய் விடைத்த னித்துசர்வேதப ரம்பரை யுட்க ளித்திடவரும்வீரா
சீரணி யுந்திரை தத்து முத்தெறிகாவிரி யின்கரை மொத்து மெத்தியசீர்புனை கின்றதி ருத்த வத்துறைவரும்வாழ்வே
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெடமோதிய டர்ந்தருள் பட்ச முற்றியதேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள்பெருமாளே.
