Song 887
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
- Sthalam
- திருவையாறு
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனதான
Lyrics
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழிசுரர்த மாரமு தோகுயி லோமொழியிதழ்கோவை
துவர தோஇல வோதெரி யாஇடைதுகளி லாவன மோபிடி யோநடைதுணைகொள் மாமலை யோமுலை தானெனஉ ரையாடிப்
பரிவி னாலெனை யாளுக நானொருபழுதி லானென வாணுத லாரொடுபகடி யேபடி யாவொழி யாஇடர்படுமாயப்
பரவை மீதழி யாவகை ஞானிகள்பரவு நீள்புக ழேயது வாமிகுபரம வீடது சேர்வது மாவதுமொருநாளே
கரிய மேனிய னானிரை யாள்பவன்அரிய ராவணை மேல்வளர் மாமுகில்கனகன் மார்பது பீறிய வாளரிகனமாயக்
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்கணையி னால்நில மீதுற நூறியகருணை மால்கவி கோபக்ரு பாகரன்மருகோனே
திரிபு ராதிகள் தூளெழ வானவர்திகழ வேமுனி யாவருள் கூர்பவர்தெரிவை பாதியர் சாதியி லாதவர்தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவதிமிர மோகர வீரதி வாகரதிருவை யாறுறை தேவக்ரு பாகரபெருமாளே.
