Song 884
அம்பு ராசியிற் கெண்டை செலொளித்
- Sthalam
- தஞ்சை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தானனத் தந்த தானனத்தந்த தானனத்தனதான
Lyrics
அம்பு ராசியிற் கெண்டை செலொளித்தஞ்ச வேமணிக்குழைவீசும்
அங்க ணாரிடத் தின்ப சாகரத்தங்கி மூழ்குமிச்சையினாலே
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்திந்த்ர சாலஇப்ப்ரமைதீர
எங்கு வாவெனப் பண்பி னாலழைத்தெங்கு மானமெய்ப்பொருள்தாராய்
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்கொண்டல் போல்குழற்கனமேருக்
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்கொண்ட கோலசற்குணவேலா
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்சம்பு போதகக்குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்தஞ்சை மாநகர்ப்பெருமாளே.
