Song 861
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
- Sthalam
- திருவிடைமருதூர்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனதன தான தானன தனதனதன தான தானனதனதனதன தான தானனதந்ததான
Lyrics
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபனபுளகிதஅபி ராம பூஷிதகொங்கையானை
பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடிபொருவனகணை போல்வி லோசனவந்தியாலே
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகனவெகுவிதபரி தாப வாதனைகொண்டுநாயேன்
மிடைபடுமல மாயை யால்மிக கலவிய அறி வேக சாமிநின்விதரணசிவ ஞான போதகம்வந்துதாராய்
எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினியிடர்கெடஅசு ரேசர் சேனைமுறிந்துபோக
இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிடரணமுககண பூத சேனைகள்நின்றுலாவச்
செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவகசெயசெயமுரு காகு காவளர்கந்தவேளே
திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தருதிருவிடைமரு தூரில் மேவியதம்பிரானே.
