Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 857

கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தந்தா தத்தன தந்தா தத்தனதந்தா தத்தனதனதான

Lyrics

கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரையென்றே செப்பியமொழிமாதர்

கொங்கார் முத்துவ டந்தா னிட்டதனந்தா னித்தரைமலைபோலே

வந்தே சுற்றிவ ளைந்தா லற்பமனந்தா னிப்படியுழலாமல்

மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்என்றே யிப்படிஅருள்வாயே

இந்தோ டக்கதிர் கண்டோ டக்கடமண்டா நற்றவர்குடியோட

எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரியென்றே திக்கெனவருசூரைப்

பந்தா டித்தலை விண்டோ டக்களம்வந்தோ ரைச்சிலரணகாளிப்

பங்கா கத்தரு கந்தா மிக்கபனந்தா ளுற்றருள்பெருமாளே.

All songs →