Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 843

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தந்தன தானன தந்தத்தனத்த தந்தன தானன தந்தத்தனத்த தந்தன தானன தந்தத்தனதான

Lyrics

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்டிருக்கு மண்சல வீடுபு குந்திட்டதில்மேவி

இதத்து டன்புகல் சூதுமி குந்திட்டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட்டிடமாயா

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித்தடிமேலாய்ப்

பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்குலத்தெ னும்படி கூனிய டங்கிப்பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச்சடமாமோ

தரித்த னந்தன தானன தந்தத்திமித்தி மிந்திமி தீதக் திந்தத்தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டியல்தாளம்

தனத்த குந்தகு தானன தந்தக்கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட்டிடும்வேலா

சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற்சரணோனே

செகத்தி னின்குரு வாகிய தந்தைக்களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்திருப்பெ ருந்துறை மேவிய கந்தப்பெருமாளே.

All songs →