Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 840

சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தான தனத்தன தந்த தான தனத்தன தந்ததான தனத்தன தந்ததனதான

Lyrics

சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்துசீத வரிக்குழல் கிண்டியள§முசத்

தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டுதேச மனைத்தையும் வென்றவிழிமானார்

மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்துமாலி லகப்பட நொந்துதிரிவேனோ

வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்மாயை தொலைத்திட வுன்றனருள்தாராய்

பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்றுபார மலைக்குள கன்றுகணையாலேழ்

பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்துபால்வ ருணத்தலை வன்சொல்வழியாலே

வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கைவீட ணருக்கருள் கொண்டல்மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்துவேத வனத்தில மர்ந்தபெருமாளே.

All songs →