Song 827
புலவரை ரக்ஷ¢க் குந்தாரு வேமது
- Sthalam
- சிக்கல்
- Raagam
- பந்துவராளி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி(எடுப்பு - 1/2 இடம்)தனதன தத்தத் தந்தான தானனதனதன தத்தத் தந்தான தானனதனதன தத்தத் தந்தான தானனதனதானா
Lyrics
புலவரை ரக்ஷ¢க் குந்தாரு வேமதுரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலைபொருபுய திக்கெட் டும்போயு லாவியபுகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையிலுலகிலு னக்கொப் புண்டோவெ னாநலபொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகியகவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடுமிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரைசரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசைவிழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையுமருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புயசிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்இமயம கட்குச் சந்தான மாகியமுருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதனனுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயகஎழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன்மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனைதிசைதொறு முப்பத் தெண்காதம் வீசியஅணிபொழி லுக்குச் சஞ்சார மாமளியிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவசமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்அசுரரை வெட்டிச் சங்கார மாடியபெருமாளே.
