Song 824
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
- Sthalam
- சோமநாதன்மடம்
- Raagam
- செஞ்சுருட்டி
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2தனதனன தான தான தனதனன தான தானதனதனன தான தானதனதான
Lyrics
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளுமுழலுமநு ராக மோகஅநுபோகம்
உ டலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராதவுளமுநெகிழ் வாகு மாறுஅடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீரமெனமொழியும் வீசு பாசகனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளையெனதுபகை தீர நீயும்அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசைஅடைவுதவ றாது பேணும்அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்அவனிபுகழ் சோமநாதன்மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழமுகரசல ராசி வேகமுனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறுமுனியஅறி யாத தேவர்பெருமாளே.
