Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 811

அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தன்னதனத் தன்னதனத் தன்னதனத்தன்னதனத் தனாதாத்ததந்ததான

Lyrics

அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்தன்னமயப் புலால்யாக்கைதுஞ்சிடாதென்

றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்கன்னியசற் றுலர்முச்சடங்கயோகம்

என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்டின்னணமெய்த் தடாமார்க்கமின்புறாதென்

றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்தின்னதெனப் படாவாழ்க்கைதந்திடாதோ

கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்கண்ணவிரச் சுறாவீட்டுகெண்டையாளைக்

கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்கன்னிலையிற் புகாவேர்த்துநின்றவாழ்வே

பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்பொன்னிநதிக் கராநீர்ப்புயங்கனாதா

பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்பொன்னுலகத் திராசாக்கள்தம்பிரானே.

All songs →