Song 789
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
- Sthalam
- பாகை
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தானம், தான தானன தானம்தான தானன தானம்தனதான
Lyrics
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்தாகம் வேர்வுற மால்கொண்டயராதே
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்றாயு வேதனை யேயென்றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்த்யாக மீபவர் யாரென்றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்தேவ நாயக நானின்றடைவேனோ
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்பாவை பாகனு நாளும்தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்பாகை மாநக ராளுங்குமரேசா
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்கூறு நாவல மேவுந்தமிழ்வீரா
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்கோல மாமயி லேறும்பெருமாளே.
