Song 743
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
- Sthalam
- திருநாவலு¡ர்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தானதன தத்த தானதன தத்ததானதன தத்ததனதான
Lyrics
கோல மறை யொத்த மாலைதனி லுற்றகோரமதன் விட்டகணையாலே
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்றகோகிலமி குத்தகுரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றிஆரழலி றைக்குநிலவாலே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்தமாசைகொட ணைக்கவரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்தநாரணனு மெச்சுமருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்துநாகமற விட்டமயில்வீரா
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கிசீரணி தனத்திலணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்றதேவர்சிறை விட்டபெருமாளே.
