Song 733
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
- Sthalam
- திருக்கோவலு¡ர்
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தானன, தான தானன தானனதான தானன தானனதனதான
Lyrics
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவபாவை யாரிள நீரனமுலையாலும்
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழைபார காரன வார்குழலதனாலுஞ்
சாவ தார விதாரமு தார்த ராவித ழாலிதசாத மூரலி தாமதிமுகமாலுஞ்
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகுசார மாயதி லேயுறலொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரியாதி காணரி தாகியபரமேச
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுரனாதி தேவர்க ளியாவர்கள்பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம் விழாவொலிகோடி யாகம மாவொலிமிகவீறும்
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுதகோதை யானையி னோடமர்பெருமாளே.
