Song 726
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
Chandam
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)தனன தான தனன தந்த தனன தான தனன தந்ததனன தான தனன தந்ததனதான
Lyrics
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்துபிணிக ளான துயரு ழன்றுதடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்திபிடிப டாத ஜனன நம்பியழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்தநளின பாத மெனது சிந்தையகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பிநலன தாக அடிய னென்றுபெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்றுபொருநி சாச ரனைநி னைந்துவினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்துபுளக மேவ தமிழ்பு னைந்தமுருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்சிலையி ராம னுடனெ திர்ந்துசமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்தசிறுவை மேவி வரமி குந்தபெருமாளே.
