Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 721

முகிலாமெனும் வார்குழ லார்சிலை

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனனாதன தானன தானனதனனாதன தானன தானனதனனாதன தானன தானனதனதான

Lyrics

முகிலாமெனும் வார்குழ லார்சிலைபுருவார்கயல் வேல்விழி யார்சசிமுகவார்தர ளாமென வேநகைபுரிமாதர்

முலைமாலிணை கோபுர மாமெனவடமாடிட வேகொடி நூலிடைமுதுபாளித சேலைகு லாவியமயில்போல்வார்

அகிசேரல்கு லார்தொடை வாழையின்அழகார்கழ லார்தர வேய்தருஅழகார்கன நூபுர மாடிடநடைமேவி

அனமாமென யாரையு மால்கொளவிழியால்சுழ லாவிடு பாவையர்அவர்பாயலி லேயடி யேனுடலழிவேனோ

ககனார்பதி யோர்முறை கோவெனஇருள்காரசு ரார்படை தூள்படகடலேழ்கிரி நாகமு நூறிடவிடும்வேலா

கமலாலய நாயகி வானவர்தொழுமீசுர னாரிட மேவியகருணாகர ஞானப ராபரையருள்பாலா

மகிழ்மாலதி நாவல்ப லாகமுகுடனாடநி லாமயில் கோகிலமகிழ்நாடுறை மால்வளி நாயகிமணவாளா

மதிமாமுக வாவடி யேனிருவினைதூள் பட வேயயி லேவியவளவாபுரி வாழ்மயில் வாகனபெருமாளே.

All songs →