Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 715

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)தான தந்த தான தந்த தான தந்த தான தந்ததான தந்த தான தந்ததனதான

Lyrics

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்குசொரி பிண்ட மாயு ருண்டுவடிவான

தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்துசோரு மிந்த நோய கன்றுதுயராற

ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்சனார ணங்க ளாக மங்கள்புகழ்தாளும்

ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கையாடல் வென்றி வேலு மென்றுநினைவேனோ

வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பைவாணி பஞ்ச பாணி தந்தமுருகோனே

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்துவாழ்பெ ருஞ்ச ராச ரங்களுறைவோனே

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டுவேடர் மங்கை யோடி யஞ்சஅணைவோனே

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்றமேரு மங்கை யாள வந்தபெருமாளே.

All songs →