Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 681

கார்ச்சார்குழ லார்விழி யாரயி

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தாளம் - திஸ்ர த்ருபுடைதாத்தாதன தானன தானனதாத்தாதன தானன தானனதாத்தாதன தானன தானனதனதான

Lyrics

கார்ச்சார்குழ லார்விழி யாரயிலார்ப்பால்மொழி யாரிடை நூலெழுவார்ச்சாரிள நீர்முலை மாதர்கள்மயலாலே

காழ்க்காதல தாமன மேமிகவார்க்காமுக னாயுறு சாதகமாப்பாதக னாமடி யேனைநினருளாலே

பார்ப்பாயலை யோவடி யாரொடுசேர்ப்பாயலை யோவுன தாரருள்கூர்ப்பாயலை யோவுமை யாள்தருகுமரேசா

பார்ப்பாவல ரோதுசொ லால்முதுநீர்ப்பாரினில் மீறிய கீரரையார்ப்பாயுன தாமரு ளாலொர்சொலருள்வாயே

வார்ப்பேரரு ளேபொழி காரணநேர்ப்பாவச காரண மாமதஏற்பாடிக ளேயழி வேயுறஅறைகோப

வாக்காசிவ மாமத மேமிகவூக்காதிப யோகம தேயுறுமாத்தாசிவ பாலகு காவடியர்கள்வாழ்வே

வேர்காடவல் வேடர்கள் மாமகளார்க்கார்வநன் மாமகி ணாதிருவேற்காடுறை வேதபு ¡£சுரர்தருசேயே

வேட்டார்மக வான்மக ளானவளேட்டார்திரு மாமண வாபொனினாட்டார்பெரு வாழ்வென வேவருபெருமாளே.

All songs →