Skip to content
73, Theppakulam Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 66

தெருப்பு றத்துத் துவக்கியாய்

Chandam

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தத்தத் தனத்தனாதனத்த தத்தத் தனத்தனாதனத்த தத்தத் தனத்தனாதந்ததானா தனனா

Lyrics

தெருப்பு றத்துத் துவக்கியாய்முலைக்கு வட்டைக் குலுக்கியாய்சிரித்து ருக்கித் தருக்கியேபண்டைகூள மெனவாழ்

சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்மனத்தை வைத்துக் கனத்தபேர்தியக்க முற்றுத் தவிக்கவேகண்டுபேசி யுடனே

இருப்ப கத்துத் தளத்துமேல்விளக்கெ டுத்துப் படுத்துமேலிருத்தி வைத்துப் பசப்பியேகொண்டுகாசு தணியா

திதுக்க துக்குக் கடப்படாமெனக்கை கக்கக் கழற்றியேஇளைக்க விட்டுத் துரத்துவார்தங்கள்சேர்வை தவிராய்

பொருப்பை யொக்கப் பணைத்ததோரிரட்டி பத்துப் புயத்தினால்பொறுத்த பத்துச் சிரத்தினால்மண்டுகோப முடனே

பொரப்பொ ருப்பிற் கதித்தபோரரக்கர் பட்டுப் பதைக்கவேபுடைத்து முட்டத் துணித்தமாலன்புகூரு மருகா

வரப்பை யெட்டி குதித்துமேலிடத்தில் வட்டத் தளத்திலேமதர்த்த முத்தைக் குவட்டியேநின்றுசேலி னினம்வாழ்

வயற்பு றத்துப் புவிக்குள்நீள்திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்வயத்த நித்தத் துவத்தனேசெந்தில்மேவு குகனே.

All songs →